குஜராத்தில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கிறது: ஸ்டாலின் பேசிய முழு விடியோ

குஜராத் மாநிலத்தில், தேர்வுக் குழு பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை, பல்கலைக துணைவேந்தராக மாநில அரசே நியமிக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
குஜராத்தில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கிறது
குஜராத்தில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கிறது


சென்னை: தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில், தேர்வுக் குழு பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை, பல்கலைக துணைவேந்தராக மாநில அரசே நியமிக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை, மாநில அரசே நியமிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட  மசோதா குறித்த விவாதத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார்.

விவாதத்தின் போது முதல்வர் கூறியதாவது, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இல்லாதது, உயர்கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.

இதுமட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் துணைவேந்தர்கள் நியமனங்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்று ஆய்வு செய்தபோது, தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில், தேர்வுக் குழு பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை, மாநில அரசே நியமிக்கிறது. இதுபோல ஆந்திரம், தெலங்கானா, கர்நாடக மாநிலங்களிலும் தேர்வுக் குழு பரிந்துரைக்கும் மூன்று பேரில் ஒருவர், மாநில அரசின் ஒப்புதலுடனே நியமிக்கப்படுகிறார் என்று ஸ்டாலின் பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com