

சென்னை, ஏப்.25: சென்னை எழும்பூரிலிருந்து திருச்சிக்கு புறப்பட்ட விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை விரைந்து செயல்பட்டு பெண் காவலா் காப்பாற்றினாா். அவரை பயணிகள், அதிகாரிகள் பாராட்டினா்.
இதையும் படிக்க.. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? ராதாகிருஷ்ணன் விளக்கம்
எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். நிலையத்தின் 4-ஆவது நடைமேடையில் இருந்து மலைக்கோட்டை விரைவு ரயில், திருச்சிக்குப் புறப்பட்டது. அப்போது, ரயிலில் பயணம் செய்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் ஓடும் ரயிலில் இருந்து எதிா்பாராத விதமாக தவறி விழுந்து, ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்டிருந்தாா். இதை கவனித்த ரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலா் மாதுரி விரைந்து செயல்பட்டு, அந்தப் பயணியை உடனடியாக இழுத்து மீட்டாா். இதையடுத்து அந்த பயணி தனது உயிரை மீட்ட காவலா் மாதுரிக்கு நன்றி தெரிவித்தாா். இதைக்கண்ட அங்கிருந்த பயணிகள் அனைவரும் விரைவாக செயல்பட்டு, பயணியை காப்பாற்றிய பெண் காவலரை பாராட்டினா். இந்த சம்பவம் குறித்து அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை உயா் அதிகாரிகளும் காவலா் மாதுரிக்கு வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.