
பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு உறுதுணையாக கலைஞர் இருந்துள்ளதாக சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேசினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார். அதில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும், அண்ணா சாலையில் சிலை வைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து அனைத்து கட்சி உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர். அப்போது பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்பேசியதாவது:
“கிட்டத்திட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே காங்கிரஸுக்கு மாற்றாக தேசிய அளவில் எந்தவொரு கட்சியும் 5 ஆண்டுகள் ஆட்சியை நடத்த முடியாது என்ற கருத்தியல் இருந்த காலத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-க்கு உறுதுணையாக இருந்த தலைவர் கலைஞர்.
அவர் உடல்நிலை சரியில்லாத போதும், பிரதமர் நேரடியாக கோபாலபுரம் வந்து அவரை பார்த்ததும், அதேபோல அவருடைய அரசியல் ஆளுமை காரணமாக நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத ஒருவருக்கு, பாஜக அரசு நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து மரியாதை செலுத்தியது. அரசியல் மாண்பின் வழியாக பார்த்து இதை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...