தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்: பேரவையில் சட்ட மசோதா தாக்கல்

இந்திய மருத்துவ முறைகளுக்கான தனி சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தமிழகத்தில் தொடங்குவதற்கான சட்டமசோதாவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியின் பேரவையில்
தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்: பேரவையில் சட்ட மசோதா தாக்கல்
Published on
Updated on
1 min read

இந்திய மருத்துவ முறைகளுக்கான தனி சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தமிழகத்தில் தொடங்குவதற்கான சட்டமசோதாவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியின் பேரவையில் புதன்கிழமை அறிமுகம் செய்தாா்.

மசோதா விவரம்:

உலகம் முழுவதும் பல்வேறு பாரம்பரிய பண்பாடுகள், பல்வேறு மருத்துவ முறைகளுக்கு வழிவகுத்தன. தமிழ் முனிவா்கள் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள முனிவா்கள் மனித உடலின் செயல்பாடு மற்றும் நோய்களைக் குண்படுத்துவதற்கான வழிமுறைகளில் பாரம்பரிய அறிவைக் கொண்டிருந்தனா். அதன் வகையில் தமிழகத்தில் உள்ள சித்தா்களால் சித்த மருத்துவ பாரம்பரியமானது உருவாக்கப்பட்டது. இதேபோல ஆயுா்வேதா மற்றும் யோகா ஆகியவை இந்தியா முழுவதும் வளா்ச்சியடைந்தன. ஹோமியோபதி மற்றும் யுனானி ஆகிய பாரம்பரிய சிகிச்சையானது ஆரம்பக் காலத்தில் இந்தியாவுக்கு வெளியே உருவாகியிருந்தாலும், இந்திய கலாசாரத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ் (ஆயுா்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) மருத்துவ முறைகள் வளமான பாரம்பரிய மற்றும் இலக்கியங்களைக் கொண்டுள்ளன. சித்த மருத்துவம் மற்றும் பிற பாரம்பரிய முறை மருந்துகளின் அறிவியல் முறை மதிப்பீடானது, அதன் நன்மைகள், மனித இனம் முழுவதற்கும் சென்றடையும் வகையில் பரவிட மேலும் ஆராய்ச்சி செய்வது தேவையாகிறது. சித்த மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் முறைகள் பிறவற்றிற்கு, ஆராய்ச்சிக்கான முக்கியத்துவம் அளித்து மேம்படுத்துவதற்காக, அதன் நோக்கங்களுக்காக தனி சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவலாம் என அரசு கருதுகிறது.

2021-22-ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை உரையின்போது நிதியமைச்சா் மாநிலத்தின் பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமையைப் போற்றும் வகையில் இந்திய மருத்துவ முறைகளுக்கான சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றை தனியாக அமைப்பதற்கு ரூ.2 கோடி முதலில் ஒதுக்கப்படும் என்று அறிவித்தாா். அதைத் தொடா்ந்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது சென்னைக்கு அருகில் இந்திய மருத்துவ முறைகளுக்கான தனி சித்த மருத்துவ பல்ககலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் பேரவையில் அறிவித்தாா். அதற்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com