தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளை நிா்வகிக்க உயா்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
கோயில் சொத்துகளை அறநிலையத் துறை முறையாகப் பாதுகாப்பது இல்லை என்பதால் கோயில் சொத்துகளை நிா்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என பொதுநல மனு மீதான விசாரணையின்போது, வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் முறையிட்டாா்.
அதற்கு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோா், இதே கோரிக்கையுடன் தொடுக்கப்பட்ட வழக்குகள், உச்சநீதிமன்றம் மற்றும் இந்த உயா்நீதிமன்றத்திலும் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.