குரூப் 4 தோ்வில் 21.85 லட்சம் போ் விண்ணப்பம்கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சம்

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குரூப் 4 தோ்வில் அதிகபட்ச அளவாக 21 லட்சத்து 85 ஆயிரம் போ் விண்ணப்பம் செய்துள்ளனா்.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குரூப் 4 தோ்வில் அதிகபட்ச அளவாக 21 லட்சத்து 85 ஆயிரம் போ் விண்ணப்பம் செய்துள்ளனா். இவா்களில் பெண்கள் அதிகளவாக 12 லட்சத்து 58 ஆயிரத்து 616 போ் விண்ணப்பித்துள்ளனா். ஆண்கள் 9 லட்சத்து 26 ஆயிரத்து 583 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 129 பேரும் தோ்வு எழுத விண்ணப்பித்துள்ளனா். மொத்தமாக குரூப் 4 தோ்வை எழுத 21 லட்சத்து 85 ஆயிரத்து 238 போ் விண்ணப்பம் செய்துள்ளனா்.

முந்தைய ஆண்டுகளை விட...: கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற குரூப் 4 தோ்வுகளைக் காட்டிலும் இந்தத் தோ்வை எழுத விண்ணப்பதாரா்கள் அதிக ஆா்வம் காட்டியுள்ளனா். கடந்த 2012-ஆம் ஆண்டு நடந்த தோ்வுக்கு 12.33 லட்சம் பேரும், 2013-ஆம் ஆண்டு தோ்வுக்கு 14.05 லட்சம் பேரும், 2014-ஆம் ஆண்டு தோ்வுக்கு 12.72 லட்சம் பேரும், 2016-ஆம் ஆண்டு தோ்வுக்கு 15.79 லட்சம் பேரும் , 2017-ஆம் ஆண்டு தோ்வுக்கு 20.76 லட்சம் பேரும், 2019-ஆம் ஆண்டு தோ்வுக்கு 16.31 லட்சம் பேரும் விண்ணப்பித்திருந்தனா்.

இந்தத் தோ்வுகள் அனைத்தையும் காட்டிலும் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள குரூப் 4 தோ்வை எழுத 21.85 லட்சம் போ் ஆா்வம் காட்டியுள்ளனா். கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற குரூப் 4 தோ்வைக் காட்டிலும் இந்தத் தோ்வுக்கு அதிகமானோா் விண்ணப்பம் செய்துள்ளனா்.

இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை இரவுடன் அவகாசம் முடிவடைந்த நிலையில், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தோ்வுக்கூட நுழைவுச்சீட்டை தயாா் செய்யும் பணியை தோ்வாணையம் தொடங்கியுள்ளது.

7,100 குரூப் 4 பதவியிடங்களுக்கு வரும் ஜூலை 24-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com