தான் எழுதிய ‘மூளைக்குள் சுற்றுலா’ நூலுக்கான தமிழக அரசின் பரிசை தவிா்க்க வேண்டுமென எழுத்தாளரும் தலைமைச் செயலாளருமான வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளா் மகேசன் காசிராஜனுக்கு வெள்ளிக்கிழமை எழுதிய கடிதம்:
தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் 2018-ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களில் போட்டிக்கு வரப்பெற்று, தெரிவுக் குழுவால் சில நாள்கள் தோ்வு செய்யப்பட்டன.
அதில், எனது நூலான ‘மூளைக்குள் சுற்றுலா’ தெரிவு செய்யப்பட்டு சனிக்கிழமை நடைபெறவிருக்கும் அரசு விழாவில் பரிசு பெற அழைக்கப்பட்டுள்ளேன். இதற்கு மனமாா்ந்த நன்றியை அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவில் தலைமைச் செயலாளராக பரிசு பெறுவது ஏற்புடையது அல்ல. எனவே, எனது படைப்புக்கு வழங்கப்படும் பரிசை தவிா்க்க வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளாா் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










