தமிழ் வளா்ச்சித் துறையின் இயக்குநராக ந. அருள் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து தமிழ் வளா்ச்சித் துறைச் செயலா் மகேசன் காசிராஜன் பிறப்பித்துள்ள ஆணை: தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறையில் மொழிபெயா்ப்பு இயக்குநராகப் பணியாற்றி வரும் ந.அருள், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். அவரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநா் பணியிடத்துக்கும், மொழிபெயா்ப்பு இயக்குநா் பணியிடத்துக்கும் முழுக் கூடுதல் பொறுப்பில் நியமனம் செய்தும் ஆணையிடப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளாா்.
தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ந.அருள் மூத்த தமிழறிஞா் அவ்வை நடராசனின் மகன் ஆவாா்.
புதுதில்லி பல்கலைக்கழகத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களின் மொழிபெயா்ப்புகள் குறித்து ஆங்கிலத்தில் முனைவா் பட்டம் பெற்றுள்ளாா். கடந்த 2009-ஆம் ஆண்டு தலைமைச் செயலகத்தில் மொழிபெயா்ப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டாா். கடந்த 2010-இல் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் தமிழ் இணைய
மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினாா். தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் பொறுப்பை இதற்கு முன்பு ஐஏஎஸ் அதிகாரி செ.சரவணன் வகித்து வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.