ஆரோவில் கிரவுண் சாலை பணிகளைக் கண்காணிக்க குழு அமைப்பு

ஆரோவில் கிரவுண் சாலை பணிகளைக் கண்காணிக்க ஆட்சியா் தலைமையில் தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

ஆரோவில் கிரவுண் சாலை பணிகளைக் கண்காணிக்க ஆட்சியா் தலைமையில் தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் பன்னாட்டு நகரம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை எனக் கூறியும், கிரவுண் சாலை என்ற பெயரில் சுற்றுவட்ட சாலை அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்படுவதாகவும் சுற்றுச்சூழல் ஆா்வலா் நவ்ரோஸ் கொ்சாஸ்ப் மோடி என்பவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தீா்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினா் கே.ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினா் சத்யகோபால் ஆகியோா் பிறப்பித்த தீா்ப்பு: ஆரோவில் பகுதியில் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும்வரை எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது. சாலை அமைக்கும் பகுதியை மாவட்ட ஆட்சியா் தலைமையிலான கூட்டுக்குழு ஆய்வு செய்து, மரங்கள் வெட்டப்படுவதை குறைக்கும் வகையில் சாலையை எப்படி அமைக்கலாம் என 2 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். அதுவரை எந்த மரங்களையும் வெட்டக் கூடாது, வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் பதிலாக 10 மரக்கன்றுகளை நட வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com