நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 10 நாள்களில் அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 10 நாள்களில் அகற்றவில்லை என்றால் தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
Published on
Updated on
1 min read

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 10 நாள்களில் அகற்றவில்லை என்றால் தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறியதாவது,

“நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறிய உத்தரவை தமிழக அரசு 10 நாள்களில் அமல்படுத்த வேண்டும். 10 நாள்களில் அமல்படுத்தவில்லை என்றால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்.

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் உள்பட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், ஊதியம் பெற அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்தனர்.

மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து உரிய நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாததால், அதிகாரிகளுக்கு ரூ. 25,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.