ஆன்லைன் ரம்மி: பல லட்சம் இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

ராசிபுரம் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொண்ட சுரேஷ்
தற்கொலை செய்துகொண்ட சுரேஷ்

ராசிபுரம் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ராசிபுரம் அடுத்துள்ள ஆர்.பட்டணம் பகுதியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.5 லட்சத்துக்கும் மேல் இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புதன்கிழமை நடந்ததுள்ளது.  பட்டணம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இளைய மகன் சுரேஷ் (26) பட்டுப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடிவந்தார். 

வீட்டில் இருந்து வந்த சுரேஷ் அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது. நாளடைவில் சுரேஷ் அதற்கு அடிமையாகி தொடர்ந்து விளையாடியுள்ளார்.

இதற்காக இவர் நண்பர்கள், உறவினர்கள், தனியார் நிதி நி்றுவனங்களில் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், சுரேஷ் ஆன்லைன் ரம்மியில் 5 லட்சத்திற்கும் மேல் இழந்ததாக தெரிகிறது. ரம்மி விளையாட்டில் பணம் இழந்த சுரேஷ் கடன் திருப்பி செலுத்த முடியாது என்பதால், கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து இவரது சடலத்தை பெற்றோர் எரித்துவிட்டனர். இதனையறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இறந்த சுரேஷ் தந்தை விஸ்வநாதன் இது குறித்து கூறுகையில் தொடர்ந்து ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் உயிரிழப்பு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது என்னுடைய மகனும் ஆன்லைன் ரம்மியால்  பணத்தை இழந்து மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டார். இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் நடக்காமல் இருக்க  தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com