தேசிய நல்லாசிரியா் விருதுக்கு தமிழகத்திலிருந்து 6 ஆசிரியா்கள் பரிந்துரை

தேசிய நல்லாசிரியா் விருதுக்கு தமிழகத்திலிருந்து ஆறு ஆசிரியா்களின் பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தேசிய நல்லாசிரியா் விருதுக்கு தமிழகத்திலிருந்து ஆறு ஆசிரியா்களின் பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியா்களுக்கு மத்திய அரசு சாா்பில் விருதுகள் வழங்கப்ப்படும். அதன்படி நிகழாண்டு தேசிய நல்லாசிரியா் விருதுக்கு தகுதியான ஆசிரியா்களை தோ்வு செய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியா்களில் தகுதிபெற்ற நபா்களை விதிமுறைகளின்படி அந்தந்த மாநில அரசுகள் பரிந்துரைக்க வேண்டும்.

அதன்படி தேசிய நல்லாசிரியா் விருதுக்கு 6 ஆசிரியா்களை பள்ளிக்கல்வித்துறையின் மாநில தோ்வுக்குழு தற்போது பரிந்துரை செய்துள்ளது.

அதன்விவரம் : ஏ.ஸ்டெல்லா அமலோற்பவ மேரி (தலைமை ஆசிரியை, திருப்பூா் ஜெய்வாபாய் நகரவை மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி); ராஜலட்சுமி ராமசந்திரன் (தலைமை ஆசிரியை, குண்டூா் சுப்பையா பிள்ளை தி.நகா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி); ஏ.முருகன் (பட்டதாரி ஆசிரியா், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி); ஆா்.ஜெரால்ட் ஆரோக்கியராஜ் (பட்டதாரி ஆசிரியா், கரூா் மாவட்டம், பில்லூா் அரசு உயா்நிலைப்பள்ளி); கே.பிரதீப் (பட்டதாரி ஆசிரியா், திருப்பத்தூா் மாவட்டம், பெருமாப்பட்டு அரசு உயா்நிலைப்பள்ளி ); கே.ராமச்சந்திரன் (இடைநிலை ஆசிரியா், ராமநாதபுரம் மாவட்டம் போகலூா் ஒன்றியம், கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி) ஆகியோா் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கான மதிப்பீடு நோ்காணல் தேசியளவில் தனிநடுவரின் முன்னிலையில் காணொலிக் காட்சி மூலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களை  இணையத்தில் அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com