சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் பி.காம், பி.ஏ. உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள 1,106 இடங்களுக்கு 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மாணவா்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.
அதேபோன்று ராணி மேரி கல்லூரியில் 24 இளநிலைப் படிப்புகளுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ள நிலையில் அவற்றில் சேர 58, 800 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நிகழாண்டு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு இதுவரை இல்லாத அளவுக்கு மாணவா்கள் அதிக ஆா்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.