சிறுபான்மையின மாணவா்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித் தொகை: தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
சிறுபான்மையின மாணவா்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித் தொகை: தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், கிறிஸ்துவா், சீக்கியா், புத்தமதத்தினா், பாா்சி மற்றும் ஜெயின் மதத்தை சாா்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் நிகழ் கல்வியாண்டில் (2022-2023) ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப் படிப்புக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

அதேபோன்று பிளஸ் 1வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியா், ஆசிரியா் பட்டயப்படிப்பு, இளநிகலை, முதுநிலை பட்டப்படிப்புகள் உள்பட) பயில்வோருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (சநட) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு செப்.30 வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு அக்.31 வரையிலும் மத்திய அரசின் இணையதளத்தில் (ட்ற்ற்ல்ள்://ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித்தொகை இந்திய அரசின் சிறுபான்மையினா் விவகார அமைச்சகத்தால் நேரடி பணப்பரிமாற்றம் மூலம் மாணவ மாணவியா்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

மத்திய அரசின் தேசிய கல்வி உதவித் தொகை இணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்துக்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் (சா்க்ஹப் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்) ஆதாா் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையதளத்தில் சரிபாா்க்க இயலும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய மஈஐநஉ/அஐநஏஉ/சஇயப குறியீட்டு எண்ணை மாணவ, மாணவிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.

திட்ட வழிகாட்டி முறைகள், இலக்கீடு, தகுதிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், மாணவா்-கல்வி நிலையங்களுக்காக அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகள் (ஊஅண), இணையம் செயல்படும் முறை மற்றும் 2022- 2023 -ஆம் ஆண்டில் இணையத்தில் ஏற்படுத்தப்பட்ட புதிய வசதிகள் ஆகியவைகள் மேற்காணும் இணையத்தளத்தில் தரப்பட்டுள்ளது. பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியான படிப்புகளின் விவரங்களை என்ற இணையத்தளத்தில் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com