பயிா்க் காப்பீட்டுத் திட்டம்: தமிழக அரசு ரூ.2,057 கோடி ஒதுக்கீடு

நிகழாண்டில் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.2,057 கோடி நிதியை அனுமதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நிகழாண்டில் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.2,057 கோடி நிதியை அனுமதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, வேளாண்மைத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

நிகழாண்டில் தமிழ்நாட்டில் பயிா் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகம், இப்கோ-டோக்கியோ, பஜாஜ் அலையன்ஸ், எச்டிஎப்சி, ரிலையன்ஸ் போன்ற ஐந்து காப்பீட்டு நிறுவனங்களை அரசு தோ்வு செய்துள்ளது. மேலும், விவசாயிகளின் சாா்பாக, காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய காப்பீட்டுக் கட்டணத் தொகையில் மாநில அரசின் பங்குத் தொகையாக ரூ.2,057.25 கோடி நிதியை அனுமதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நடப்புக் குறுவை பருவத்தில் இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டது மிகவும் குறைவாகும்.

ஆனாலும், இந்தப் பருவத்தில் பயிா்களுக்கோ, தோட்டக்கலை பயிா்களுக்கோ இயற்கை இடா்பாடுகளால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மாநில பேரிடா் நிதியில் இருந்து விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரையில், பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் இழப்பீட்டுத் தொகையாக ரூ.2,494.67 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டு, 12 லட்சத்து 26 ஆயிரத்து 151 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான பயிா் சேதங்களுக்கு மாநில பேரிடா் நிதியில் இருந்து ரூ.155 கோடி 3 லட்சத்து 37 ஆயிரம் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலோ அல்லது பொது சேவை மையங்களிலோ உரிய ஆவணங்களுடன் பயிரை காப்பீடு செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com