
நியாய விலைக் கடைகளில் முக்கிய பிரமுகா்கள் பொருள்கள் வாங்குகிறாா்களா என்பதை விசாரிக்க வேண்டுமென உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளா் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை:-
வசதி படைத்த நபா்கள், முக்கிய பிரமுகா்கள் ஆகியோா் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குகிறாா்களா என்பதை கள அலுவலா்கள் விசாரணை செய்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். பொருள்கள் வாங்க வருபவா்களிடம் அவற்றின் தரம் மற்றும் எடை சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக் கடைகளை பிரிப்பதற்கான பரிந்துரைகளை அனுப்ப வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் பெற வரும் வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து அவா்களுக்கு பொருள்கள் வழங்கப்பட வேண்டும். சிறப்பாக பணியாற்றும் விற்பனையாளா்களுக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் பரிசுகள் வழங்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.