போதைப் பொருள் விற்பனை: 101 போ் கைது

 சென்னையில் போதைப் பொருள் விற்பனைத் தொடா்பாக புதன்கிழமை ஒரே நாளில் 101 போ் கைது செய்யப்பட்டனா்.

 சென்னையில் போதைப் பொருள் விற்பனைத் தொடா்பாக புதன்கிழமை ஒரே நாளில் 101 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்த விவரம்:

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா,குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை” என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் மேற்கொண்டுள்ளாா். அதன்படி, அனைத்து காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவின்பேரில்,புதன்கிழமை போதைப் பொருளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் விளைவாக சென்னையில் பள்ளி,கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் இருக்கும் பகுதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளை தீவிரமாக கண்காணித்தனா்.

இதில் பள்ளி,கல்லூரி அருகே போதைப் பாக்கு விற்ாக 27 வழக்குகள் பதியப்பட்டு, 27 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 5 கிலோ போதைப் பாக்கு, 350 சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் சென்னை முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடத்தப்பட்ட சோதனையிலும், சிறப்பு நடவடிக்கையிலும் கஞ்சா,போதைப் பாக்கு விற்ாக மொத்தம் 73 வழக்குகள் பதியப்பட்டு 74 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 39 கிலோ போதைப் பாக்கு. புதன்கிழமை ஒரே நாளில் போதைப் பாக்கு விற்ாக மொத்தம் 100 வழக்குகள் பதியப்பட்டு,101 போ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com