
சென்னையில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக சென்னையில் இன்று 47 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
சில முக்கிய பிரமுகர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோதனை குறித்த மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.