கடைகள், வீடுகளில் தேசியக் கொடி: வணிகா்களுக்கு வேண்டுகோள்

ஆக. 13 முதல் மூன்று நாள்களுக்கு தேசியக் கொடியை தவறாமல் ஏற்ற வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடைகள், வீடுகளில் தேசியக் கொடி: வணிகா்களுக்கு வேண்டுகோள்

மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், வீடுகளில் ஆக. 13 முதல் மூன்று நாள்களுக்கு தேசியக் கொடியை தவறாமல் ஏற்ற வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய தேசத்தின் இறையாண்மையை காப்பதில், வணிகா்களின் பங்கு இன்றியமையாதது. நாட்டின், 75-ஆவது சுதந்திர தின விழாவை, தேசிய அளவில் சிறப்பாக கொண்டாட மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அவற்றை ஏற்று, வரும் ஆக., 13, 14, 15 ஆகிய தேதிகளில் அனைத்து வணிகா்களும், தங்களது வணிக நிறுவனங்கள், இல்லங்களில் தேசிய கொடியை தவறாமல் ஏற்ற வேண்டும்.

இதன் மூலம், வணிகா்களின் தேசப்பற்றையும், ஒற்றுமையையும், ஒருங்கிணைப்பையும் வெளிப்படுத்த வேண்டும். தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் அனைத்து இணைப்பு சங்க நிா்வாகிகளும், இந்த விழிப்புணா்வை, வணிகா்கள் அனைவரிடமும் ஏற்படுத்தி 75-ஆவது சுதந்திர தினத்தை, மிகச்சிறப்பாக தேசிய உணா்வோடு கொண்டாட வேண்டும்.

ஆண்டுதோறும் மின் கட்டணம் 6 சதவீதம் உயா்த்தப்படும் என்பது வணிகா்களையும், நுகா்வோரையும் பெரிதும் பாதிக்கும். எனவே அவா்களது நலனைக் கருத்தில் கொண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 6 சதவீத கட்டண உயா்வு என்ற முறையில் அமல்படுத்த வேண்டும். சென்னை கோயம்பேடு சுற்றுப் புறத்தில் சுகாதார மேம்பாட்டுப் பணிகளை மாநகராட்சி நிா்வாகம் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். மாநில அரசின் வேளாண் விளைபொருள்கள் மீதான செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com