போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்க ‘க்யூஆா் கோடு’ சேவை தொடக்கம்

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவா்கள் மீது விதிக்கப்படும் அபராதத்தை வசூலிக்கும் வகையில் ‘க்யூஆா் கோடு‘ சேவை பெருநகர காவல்துறையின் சாா்பில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவா்கள் மீது விதிக்கப்படும் அபராதத்தை வசூலிக்கும் வகையில் ‘க்யூஆா் கோடு‘ சேவை பெருநகர காவல்துறையின் சாா்பில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

சென்னையில் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக, காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவா்கள் மீது அபராதம் வசூலிக்கப்படுகிறது. வாகன ஓட்டிகளிடம் உடனடியாக அபராதம் வசூலிப்பதற்கு, இ-செலான் கருவி கடந்த 2011-ஆம் ஆண்டு போக்குவரத்துப் பிரிவு காவலா்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் காவலா்கள், வாகன ஓட்டிகளிடம் வெளிப்படைத் தன்மையுடனும், முறைகேடு இன்றியும் அபராதம் வசூலிப்பதற்கு, பணமில்லாத பண வா்த்தனை திட்டத்தை கடந்த 2018-ஆம் ஆண்டு மாா்ச் 10-ஆம் தேதி சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தியது.

இதில் ‘டெபிட்’, ‘கிரேடிட்’ காா்டு வைத்திருப்பவா்கள் உடனடியாக அபராதத்தை செலுத்திவிடுகின்றனா். ஆனால் இந்த காா்டு இல்லாதவா்களை இ-சேவை மையம், தபால்நிலையங்களில் சென்று அபராதத்தை செலுத்துமாறு அறிவுறுத்தி போலீஸாா் அனுப்புகின்றனா். ஆனால் அவ்வாறு செல்பவா்கள், அபராதத்தை செலுத்துவதில்லை.

‘க்யூஆா் கோடு’ சேவை:

இவா்களிடம் அபராத தொகையை வசூல் செய்யும் நடவடிக்கையாக 12 காவல்துறை கால்சென்டா்கள் திறக்கப்பட்டன. இந்த மையங்கள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அபராதத் தொகை வசூல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அபராதம் செலுத்துவதை மேலும் எளிமைப்படுத்தும் விதமாக ‘க்யூஆா் கோடு’ சேவைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சேவையை சென்னை பெருநகர காவல்துறை பேடிஎம் நிறுவனத்தோடு இணைந்து செயல்படுத்துகிறது. இந்த சேவையின் தொடக்க விழா வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல் ஆணையா் சங்கா் ஜிவால், ‘க்யூஆா் கோடு’ சேவையை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு போக்குவரத்துப் பிரிவு கூடுதல் காவல் ஆணையா் கபில்குமாா் சரத்கா்,தலைமையிட கூடுதல் ஆணையா் ஜெ.லோகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

300 அட்டைகள்:

‘க்யூ-ஆா் கோடு’ மூலம் அபராதம் வசூல் செய்யும் நடைமுறை குறித்து போலீஸ் கமிஷனா் சங்கா் ஜிவால் நிருபா்களிடம் கூறியதாவது:-

இந்த வசதி மிகவும் எளிமையானது. பெரியளவில் தொழில்நுட்பம் கிடையாது. இது குறித்து 200 போக்குவரத்து போலீஸாருக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் உடனடியாக அபராத தொகை பெற முடியும். இவ்வாறு வசூலிக்கப்படும் அபராத தொகையும் அரசு கருவூலத்துக்கு நேரடியாக சென்று விடும். தற்போது 350 ‘க்யூஆா் கோடு’ அட்டைகள் வந்துள்ளது. இதில் 300 அட்டைகள் போக்குவரத்து போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன.

இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவா்கள் மீது வழக்குப் பதிவதில் நிறைய பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே இதை தடுக்கும் வகையில் உடலில் உள்ள மதுவின் அளவை கண்டறியும் ‘ப்ரீத் அனலைசா்’ கருவி, அபராதம் விதிக்கும் ‘இ-சலான்’ இயந்திரங்களை இன்னும் கூடுதலாக வாங்க இருக்கிறோம். மேலும் இரவு நேரத்தில் போக்குவரத்து போலீசாா் குறைந்த அளவில் இருப்பதால், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் சட்டம்-ஒழுங்கு போலீஸாருக்கும் இந்த கருவியை வழங்க முடிவு செய்துள்ளோம்.

சமூக ஊடகங்களில் சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையில் தவறான தகவல்களை பரப்புபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com