முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கை சிங்களர் கடிதம்: கடிதத்தில் எழுதியிருந்தது என்ன?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கையில் இருந்து 63 வயதுடைய சிங்களர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். 
முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கை சிங்களர் கடிதம்: கடிதத்தில் எழுதியிருந்தது என்ன?


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கையில் இருந்து 63 வயதுடைய சிங்களர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, தமிழகத்திலிருந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்படும் என, முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

அதன்படி, முதல் கட்டமாக சென்னையிலிருந்து கப்பலில் கடந்த மே 18 ஆம் தேதி ரூ. 32.94 கோடி மதிப்பிலும், 2ஆம் கட்டமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்திலிருந்து ரூ. 67.70 கோடி மதிப்பிலும் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டன.

இந்த நிலையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி  சனிக்கிழமை தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து 3ஆம் கட்டமாக விடிசி சன் என்ற கப்பலில் ரூ. 54 கோடி மதிப்பிலான 16,500 டன் அரிசி, ரூ. 6 கோடி மதிப்பிலான 250 டன் ஆவின் பால் பவுடா், ரூ. 14 கோடி மதிப்பிலான 50 டன் உயிா் காக்கும் மருந்துகள் என மொத்தம் ரூ. 74 கோடி மதிப்பிலான 16,800 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டன.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கையில் இருந்து 63 வயதுடைய சிங்களர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில், நான் சபரகமுவா மாகாணத்தின் கேகாலை சேந்த சிங்களர். என் வயது 63. நான் புத்த மதத்தை பின்பற்றுபவன். இந்த கடினமான சூழ்நிலையில் தாங்கள் அரிசி வழங்கியத்திற்கு உங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி. 

இதய நோயாளிகளான நானும், என் துணைவியும் 10 கிலோ அரிசி பையை பெற்றுக்கொண்டோம். 

நாட்டில் நிலவும் சூழலால் அன்றாட வருமானத்தை இழந்துள்ளோம். இதயத்தின் அடி மனதில் இருந்து உங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களும் மிக்க நன்றி.

இலங்கை வாழ் மக்கள் மீதான இரக்கத்திற்கு மிகுந்த நன்றி. 

அன்புடன், விஜிதா விக்கிரமசிரி என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com