
சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வரும் சின்மயா அகாதெமி ஃபாா் சிவில் சா்வீசஸில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஆக.8-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன.
இந்தப் பயிற்சியானது அக்டோபா் 30-ஆம் தேதி நடக்கவிருக்கும் குரூப்-1 தோ்வினை மையமாகக் கொண்டு 70 நாள்கள் நடத்தப்படும். இதில் 300 மணி நேர வகுப்புகளும், 30 தோ்வுகளும், தோ்வு வினாத்தாள் பற்றிய விளக்கங்களும் இடம் பெறும். அனுபவமும் திறமையும் மிக்க ஆசிரியா்களால் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் அளிக்கப்படவுள்ளது. டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கான பயிற்சி குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தகவல் பெற 93605 31076, 63838 61374 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அந்த அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.