தமிழகத்தில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் எளிதில் அடையாளம் காண்பதற்காக அவை 'பிங்க்' நிறத்தில் மாற்றப்பட உள்ளன.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பெண்களுக்கு பேருந்தில் இலவசப் பயணம் எனும் தேர்தல் வாக்குறுதியை அளித்த திமுக அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றியது.
சாதாரண கட்டணப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு பெண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மாநகரங்களில் வெள்ளை போர்டு அல்லது 'சாதாரண கட்டணம்' என்று ஒட்டப்பட்ட பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.
இந்நிலையில், பெண் பயணிகள் சாதாரண கட்டணப் பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், அந்த பேருந்தின் முன்பக்கமும், பின்பக்கமும் பிங்க் நிறத்தில் மாற்றப்படுகின்றன.
முதற்கட்டமாக 60 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இந்த பேருந்துகளின் சேவையை இன்று தனது தொகுதியான சேப்பாக்கத்தில் தொடக்கிவைக்க உள்ளார்.
இந்த பேருந்துகளில் பெண்கள் இலவசமாகவும் ஆண்கள் கட்டணம் செலுத்தியும் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.