மின்சார திருத்த சட்டம்: திமுக கடுமையாக எதிர்க்கும்

மத்திய அரசின் மின்சார திருத்த சட்டத்தை திமுக தொடர்ந்து கடுமையாக எதிர்க்கும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

கரூர்: மத்திய அரசின் மின்சார திருத்த சட்டத்தை திமுக தொடர்ந்து கடுமையாக எதிர்க்கும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழிக்குப் பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் சந்தித்தார்.

மின்சார சட்டத்தால் தமிழகத்தில் வீடுகள், விசைத்தறி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது பாதிக்கப்படும் என்று  அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக மின்சார கட்டமைப்பு வசதிகளை தனியாருக்கு கொடுக்கும் அபாயம் ஏற்படும். மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை மத்திய அரசுக்கு முதலவர் அழுத்தம் கொடுப்பார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com