
கோவை சாய்பாபா காலனிப் பகுதியில் சொமாட்டோ உணவு டெலிவரி பாயை வழிமறித்து தாக்கிய கும்பல் அவரிடம் இருந்து உடைமைகளையும் திருடிக்கொண்டு ஒடியது.
கோவை சாய்பாபா காலனிப் பகுதியில் ஸ்ரீ விக்னேஷ் (18) என்ற சொமாட்டோ உணவு டெலிவரி பாய் தனது இரு சக்கர வானத்தில் சென்றுகொண்டிருந்த போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று, அவரை ரயில்வே டிராக் பகுதிக்கு அழைத்துச் சென்று முந்தி செல்கிறாயா என கேட்டு கருங்கற்களால் அடித்து அவரிடம் இருந்த உடமைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளது.
இதையும் படிக்க | தூத்துக்குடி: ஸ்பிக் - தினமணி சார்பில் 1000 மாணவ, மாணவிகளுக்கு தேசியக் கொடி வழங்கி விழிப்புணா்வு
இதில், பலத்த காயமடைந்த சொமாட்டோ பாய் ஸ்ரீ விக்னேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தலை மற்றும் கண், வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நான்கு தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாய்பாபா காலனி போலீசார் வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G