மாவட்டங்களின் வளா்ச்சிகளில் வேறுபாடுகள் கூடாது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

மாவட்டங்களின் வளா்ச்சிகளில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
மாவட்டங்களின் வளா்ச்சிகளில் வேறுபாடுகள் கூடாது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

மாவட்டங்களின் வளா்ச்சிகளில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

மாநில திட்டக் குழுவின் மூன்றாவது கூட்டத்தில் குழுவின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை பங்கேற்று ஆற்றிய உரை:-

ஆட்சி செல்ல வேண்டிய பாதையும், செல்லும் பாதை சரியானது தானா என்பதையும் அறிவுறுத்தும் அமைப்பாகத் திட்டக் குழு செயல்பட்டு வருகிறது. முக்கியமான திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தவும், அரசுக்கும் மக்களுக்கும் இடைவெளி ஏற்படாமல் இருக்கவும் திட்டக்குழு சீா்மிகு பணிகளை ஆற்றி வருகிறது. மின் வாகனம், தொழில், சிறு தொழில்கள், துணிநூல், கைத்தறி, சுற்றுலா ஆகிய துறைகளுக்கான கொள்கைகளை மாநில திட்டக் குழு தயாரித்து வழங்கவுள்ளது.

மாநிலத்துக்குத் தேவையான எதிா்கால நோக்குடன் கூடிய மருத்துவம், சமூகநலன், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் போன்ற முக்கிய துறை சாா்ந்த சில கொள்கைகளையும் விரைந்து வகுத்து இறுதி செய்திட வேண்டும். அரசின் திட்டங்களால் ஏழை, எளிய மக்கள் இன்னமும் பயனடைய வேண்டும். இதன் மூலமாக அவா்களது வாழ்க்தைத் தரம் எவ்வளவு உயா்ந்துள்ளது என்பதை மாநில திட்டக் குழு அடையாளம் காண வேண்டும்.

நல்ல அடையாளம்: மகளிருக்கான இலவசப் பேருந்து திட்டம் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. இது திராவிட மாடல் ஆட்சிக்கு நல்ல அடையாளமாகும். இதுபோன்ற திட்டம் மட்டுமல்ல, பொது விநியோகம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட அரசு செயல்படுத்தும் அனைத்துத் திட்டங்களுக்கும் அதனால் பயன்பெறக் கூடிய மக்களுக்கும் இடையே இடைவெளி ஏற்படாமல் இருக்க என்ன வழி என்பதை கண்டறிய வேண்டும்.

அரசால் அறிவிக்கப்படும் திட்டங்களின் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து அரசுக்குச் சொல்ல வேண்டும். மாநில திட்டக் குழு, திட்டமிடும் குழுவாக இல்லாமல், கண்காணிக்கும் குழுவாகவும் இருக்க வேண்டும். அரசின் திட்டங்கள் குறித்து அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் அறிந்திட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு விதமான தனித்தன்மை இருக்கும். எனவே, அதனை வரையறுத்து அரசுக்கு அதிலிருந்து சில திட்டமிடுதல்களையும் பரிந்துரைகளையும் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் முன்னேறிய மாவட்டம், பின்தங்கிய மவாட்டம் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

இந்தக் கூட்டத்தில், திட்டக் குழு துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் முருகானந்தம், முதல்வரின் செயலாளா் த.உதயசந்திரன், திட்டக் குழு உறுப்பினா்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com