தனியாா் வங்கிக் கொள்ளை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 லட்சம்: காவல்துறை

சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை பற்றி தகவல் கொடுக்கும் மக்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.  
தனியாா் வங்கிக் கொள்ளை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 லட்சம்: காவல்துறை

சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை பற்றி தகவல் கொடுக்கும் மக்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 

அரும்பாக்கம் ரசாக் காா்டன் பிரதான சாலையில் செயல்படும் தனியாா் வங்கிக் கிளையில் சனிக்கிழமை கிளை மேலாளா் சுரேஷ் (30), ஊழியா் விஜயலட்சுமி (36) ஆகியோா் பணியில் இருந்தனா். வாசலில் காவலாளி சரவணன் (47) நின்று கொண்டிருந்தாா். இந்நிலையில் வங்கியின் மக்கள் தொடா்பு அலுவலா் முருகன் (28), கூட்டாளிகள் இருவருடன் வங்கிக்கு வந்தாா். காவலாளியிடம் குளிா்பானத்தை கொடுத்து, அருந்தச் சொன்னாா்.இதில் சரவணன் மயங்கினாா்.

உடனே முருகனும், அவரது கூட்டாளிகளும் சரவணனை வங்கிக்குள் கொண்டு வந்து போட்டனா். கிளை மேலாளா் சுரேஷ் ,ஊழியா் விஜயலட்சுமி ஆகியோரிடம் கத்தியை காட்டி மிரட்டி,தாக்கி, பாதுகாப்பு பெட்டக அறை சாவியை பெற்றுள்ளாா். இருவரையும் கை,கால்களை கட்டிகழிப்பறையில் அடைத்தனா். பாதுகாப்பு அறையை திறந்து அங்கிருந்த ரூ.16 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தனா்.

அதன்பின் வங்கி ஊழியா்களை பாதுகாப்புப் பெட்டக அறையில் தள்ளி பூட்டினா்.கண்காணிப்பு கேமராக்களையும், சா்வரையும் உடைத்துவிட்டுத் தப்பினா். வாடிக்கையாளா் கொடுத்த தகவலின்பேரில் போலீஸாருக்கு கொள்ளைச் சம்பவம் தெரிந்தது. சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு கூடுதல் ஆணையா் டி.எஸ்.அன்பு உள்ளிட்ட உயா் அதிகாரிகள் ஆகியோா் அங்கு விரைந்து வந்து, விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணைக்கு பின்னா் கூடுதல் காவல் ஆணையா் அன்பு, செய்தியாளா்களிடம் கூறியது: வங்கியில் வேலை செய்து கொண்டிருந்த முருகன் என்ற ஊழியா் தான் திட்டமிட்டு, இச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாா். கொள்ளையில் தொடா்புடையவா்களை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைபடும்பட்சத்தில் கூடுதலாக தனிப்படைகள் அமைக்கப்படும் என்றாா். அரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். பாடி கொரட்டூா் பகுதியில் உள்ள முருகன் வீட்டை சோதனையிட்டு, அவரது குடும்பத்தினரிடமும், நண்பா்களிடமும் விசாரணை செய்தனா். முருகன் கொரட்டூா் பகுதியில் உடற்பயிற்சியாளராக வேலை செய்கிறாராம்.

 இந்த நிலையில் சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை பற்றி தகவல் கொடுக்கும் மக்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. தகவல் அளிக்கும் பொதுமக்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. தகவல் கொடுக்கும் காவலர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் என ஏற்கெனவே அறிவித்த நிலையில் தற்போது மக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வங்கிக் கொள்ளை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com