சுதந்திர நாள்: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி கொடியேற்றினார்

புதுச்சேரியில் சுதந்திர நாள் விழா திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. 
சுதந்திர நாள்: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி கொடியேற்றினார்

புதுச்சேரி: புதுச்சேரியில் சுதந்திர நாள் விழா திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு நடைபெற்ற விழாவில் காலை 9.07-க்கு முதலமைச்சர் என்.ரங்கசாமி தேசியக் கொடியேற்றி வைத்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

நாட்டின் சுதந்திர நாளில் புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

புதுவை முதலைமைச்சர் என். ரங்கசாமி தேசியக்கொடியேற்றி வைத்து காவலர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் சட்டப்பேரவை தலைவர், அமைச்சர்கள், சட்டபேராவை உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்த காவலர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இதனையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. 

முதல்வர் தனது உரையில், புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும், மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம் ரூ. 500 உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com