
செப்.3ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் கேரளம் செல்கிறார்.
கேரள மாநிலம் செல்லும் அவர் திருவனந்தபுரத்தில் நடைபெறும் 30ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கிறார். உள்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், சமூக நலன் உள்ளிட்டவை இந்தக் கூட்டத்தில் பிரதானமாக விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
29ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டம் திருப்பதியில் நடைபெற்ற நிலையில் இந்த முறை திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைக் கொண்டது தென் மண்டல குழு.
இதையும் படிக்க- பள்ளியில் மாணவர்களை தூய்மை பணியில் ஈடுபடுத்தக்கூடாது: பள்ளிக்கல்வித் துறை
பொதுவாக, தென்மண்டல கவுன்சிலின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் இருப்பார். அதன் துணைத் தலைவர் பொறுப்புக்கு தென்னிந்தியாவின் ஏதாவது ஒரு மாநிலத்தின் முதல்வர் சுழற்சி முறையில் நியமிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...