ஓபிஎஸ் குறித்து பேசுவதற்கு கே.பி.முனுசாமிக்கு எந்த தகுதியும் இல்லை: பெங்களூரு புகழேந்தி பேட்டி

முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் குறித்து பேசுவதற்கு கே.பி. முனுசாமிக்கு எந்த தகுதியும் கிடையாது
ஓபிஎஸ் குறித்து பேசுவதற்கு கே.பி.முனுசாமிக்கு எந்த தகுதியும் இல்லை: பெங்களூரு புகழேந்தி பேட்டி

ஒசூர்: முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் குறித்து பேசுவதற்கு கே.பி. முனுசாமிக்கு எந்த தகுதியும் கிடையாது எனவும், அவர் அரசியல் நிறம் மாறும் பச்சோந்திகளில் முதன்மையானவர்  என ஓசூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார். 

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே. பி முனுசாமி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் நிர்வாகி பெங்களூரு புகழேந்தி ஒசூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் பேசியதாவது: அரசியல் நிறம் மாறும் பச்சோந்திகளில் முதன்மையான கே.பி முனுசாமி தியாகத்தை பற்றி பேசி வருகிறார். அதிமுகவுக்காக எத்தனையோ பேர் உயிரிழந்துள்ளனர். ரத்தம் சிந்தி உள்ளனர். இதே கே.பி. முனுசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்தபோது ஓ.பன்னீர்செல்வத்தை போல ஒரு தலைவரை பார்க்க முடியாது. தமிழகத்தில் எந்த தொகுதியில் நின்றாலும் வெற்றி பெறுவார். எடப்பாடி பழனிச்சாமிக்கு துணிச்சல் இருக்கிறதா என கேள்வி கேட்டவர் கே.பி முனுசாமி. இப்பொழுது எடப்பாடி அணிக்கு சென்றுள்ள முனுசாமி அதே டயலாக்கை பழனிசாமிக்காக பேசி வருகிறார். நீங்கள் என்ன தியாகம் செய்தீர்கள். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளை அடக்கி ஏமாற்றி அரசியல் செய்து வருகிறீர்கள். ஜெயலலிதாவை ஏமாற்றி சம்பாதித்தீர்கள். அமைச்சராக இருக்கும் பொழுது உங்களுக்கு அரசியல் வாழ்வு கொடுத்தவர் ஓபிஎஸ். நிறம் மாறும் அரசியல் பச்சோந்திகளில் முதன்மையானவர் கே பி முனுசாமி. அப்படிப்பட்ட ஒருவர் ஓபிஎஸ் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. நீங்கள் தற்போது எடப்பாடி பழனிசாமியை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த அணிக்கு சென்று இருக்கிறீர்கள். அவரை முழுமையாக ஒழித்து விடுங்கள். அந்த வேலையை முதலில் பாருங்கள். ஓபிஎஸ் பற்றியெல்லாம் தேவையில்லாமல் பேசாதீர்கள் என்று பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com