அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு

சென்னையில் அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை குரோம்பேட்டை பணிமனையில் ஊதிய உயர்வு குறித்து 66 தொழிற்சங்கங்களுடன் 7 கட்டங்களாக போக்குவரத்துத் துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், தொழிற்சங்கங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து 14வது ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

இதில், முக்கிய திருத்தமாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை என்பது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவிகிதம் ஊதிய உயர்வு அளிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஓட்டுநருக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ. 2,012 என்றும் அதிகபட்சமாக ரூ. 7,981ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நடத்துநருக்கு குறைந்தபட்சம் ரூ. 1,965 என்றும், அதிகபட்சம் ரூ. 6,640 என்றும் உயர்த்தப்பட்டு கையெழுத்தானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com