‘பாஜகவுக்கு வந்தால் ரூ. 20 கோடி; மறுத்தால்....’: பேரம் பேசியதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவுக்கு வந்தால் ரூ. 20 கோடி கொடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு வைத்துள்ளது.
‘பாஜகவுக்கு வந்தால் ரூ. 20 கோடி; மறுத்தால்....’: பேரம் பேசியதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவுக்கு வந்தால் ரூ. 20 கோடி கொடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு வைத்துள்ளது.

தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சோதனை செய்த சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பாஜகவிலிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் பேரம் பேசப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் கூறியதாவது:

“ஆம் ஆத்மியின் எம்.எல்.ஏ.க்கள் அஜய் தத், சஞ்சீவ் ஜா, சோம்நாத் பார்தி மற்றும் குல்தீப் யாதவை பாஜகவின் முக்கியத் தலைவர்கள் தொடர்பு கொண்டனர். அப்போது, பாஜகவில் இணைய ரூ. 20 கோடி வழங்கப்படும் எனவும், பிற எம்.எல்.ஏ.க்களை அழைத்து வந்தால் ரூ. 25 கோடி வழங்கப்படும் எனவும் பேரம் பேசியுள்ளனர்.

பாஜகவில் இணையாவிட்டால், மணீஷ் சிசோடியாவை போல் பொய் வழக்குகள் தொடரப்பட்டு சிபிஐ, அமலாக்கத்துறையை எதிர்கொள்ள நேரிடும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.” என்று தெரிவித்தார்.

மேலும், இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பாஜக பேரம் பேசிய 4 எம்.எல்.ஏ.க்களும் விளக்கம் அளித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. இதுகுறித்து ஆலோசிக்க இன்று மாலை 4 மணிக்கு கட்சியின் அரசியல் விவகாரக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com