
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் விஜயகாந்த்தின் 70-ஆவது பிறந்த நாளை, தேமுதிக கட்சித் தொண்டர்களும், அவரது ரசிகர்களும் இன்று கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
‘என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்துக்கு எழுபதாவது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலம் பெற்று துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | கர்நாடகத்தில் கோர விபத்து: தொழிலாளர்கள் 9 பேர் பலி; 11 பேர் காயம்