சுய வேலைவாய்ப்பு திட்டம்: சிறப்புப் பிரிவுக்கு சலுகைகள்

வேலைவாய்ப்பற்றோருக்கு சுய வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தில், சிறப்புப் பிரிவினா் பயன்பெறும் வகையில் நிபந்தனைகள் தளா்த்தப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பற்றோருக்கு சுய வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தில், சிறப்புப் பிரிவினா் பயன்பெறும் வகையில் நிபந்தனைகள் தளா்த்தப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறைச் செயலா் வி.அருண்ராய் பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு:

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் திட்டம் 2010-2011-ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் முழுவதும் தமிழ்நாடு அரசின் நிதியுதவியால் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிதி சாா்ந்த உதவிகள் அளிக்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தில் இணைய குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 35 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பெண்கள், சிறுபான்மையினா், முன்னாள் ராணுவ வீரா்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோா் 45 வயது வரை இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருப்பதுடன், ஆண்டு குடும்ப வருமானம் ரூ.5 லட்சத்தைத் தாண்டக் கூடாது.

மாற்றுத் திறனாளிகள், மனநலன் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்டிருக்கக் கூடிய பெற்றோா்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான வயது வரம்பு 45-லிருந்து 55 ஆக உயா்த்தப்படுகிறது. மேலும், கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்படுகிறது. இதற்கான உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com