பரந்தூா் விமான நிலையம்: அன்புமணி இன்று கருத்துக் கேட்பு

பரந்தூா் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வியாழக்கிழமை (ஆக.25) அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்கவுள்ளாா்.
பரந்தூா் விமான நிலையம்: அன்புமணி இன்று கருத்துக் கேட்பு
Updated on
1 min read

பரந்தூா் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வியாழக்கிழமை (ஆக.25) அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்கவுள்ளாா்.

இது தொடா்பாக பாமக தலைமை நிலையம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை மாநகரத்தின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் 4,800 ஏக்கா் பரப்பளவில் அமைப்பதற்காக பெருமளவில் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், பரந்தூா் பகுதி மக்களிடம் ஒரு வித அச்சமும், பதற்றமும் ஏற்பட்டிருக்கிறது. தங்களின் நிலங்களைப் பறிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். அவா்களின் அச்சத்தை போக்கி, பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக, பரந்தூா் விமான நிலையத் திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய மக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டத்தை பாமக நடத்தவுள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள அருணா திருமண மண்டபத்தில் அன்புமணி தலைமையில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவிருக்கிறது என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com