

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு சட்ட உறுப்பினரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.
தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் மற்றும் இரு தனியாா் நிறுவனங்கள் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை கிளை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு சட்ட உறுப்பினரை நியமிக்கும் வரை, மின்கட்டண உயா்வு தொடா்பான இறுதி உத்தரவு பிறப்பிக்கத் தடை விதிக்கப்படுகிறது. அதேநேரம், கட்டண உயா்வு குறித்து தற்போதைய நடவடிக்கைகள் தொடரலாம் என கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அமைச்சா் செந்தில் பாலாஜி கூறுகையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு சட்ட உறுப்பினரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெள்ளலூா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்கு மாநில அரசின் நிதி, சிறப்பு நிதியில் இருந்து செலவு செய்யப்படவில்லை. மாநகராட்சி நிா்வாகத்தின் பொதுநிதியில் இருந்து மட்டுமே செலவு செய்யப்பட்டது. ஆனால், மாநில அரசின் நிதியில் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கூறுகிறாா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.