
சென்னை: நடிகர் விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.21 கோடி கடனை செலுத்தாதது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தயாரிப்பாளர் அன்புச்செழியனிடம் விஷால் பெற்ற ரூ.21.29 கோடி கடனை லைகா நிறுவனம் செலுத்தியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. ஒரே நாளில் ரூ.18 கோடி நஷ்டம் ஆன நிலையில், 6 மாதங்கள் ஆனாலும் பணத்தை செலுத்த முடியாது என விஷால் தரப்பு வாதம் செய்ததது.
திரைப்பட வாழ்க்கை முடிந்துவிட்டது என சொல்கிறீர்களா என ஆஜரான விஷாலிடம் நீதிபதி செந்தில் ராமமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க: வீரமாமுனிவர் வரலாறு: வளர்ந்து நிலவும் குழப்பங்கள்!
இவ்வழக்கின் விசாரணை செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அன்றைய தினமும் விஷால் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.