திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

நடிகராக இருந்தால் சிவாஜி, ரஜினியை மிஞ்சியிருப்பார் ஓபிஎஸ்: ஜெயக்குமார்

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி. தினகரனுக்கு அதிமுகவில்  இடமில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

News image

ஜெயக்குமார் (கோப்புப் படம்)

Updated On :28 ஆகஸ்ட் 2022, 6:59 am

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி. தினகரனுக்கு அதிமுகவில்  இடமில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் பெட்டிப் பெட்டியாக பணம் வைத்துள்ளனர். அவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் குவிந்துள்ளது. பணத்தை வைத்து ஆள் பிடிக்கும் வேலையை செய்து வருகின்றனர்.

பணம் பாதாளம் வரை பாய்கிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் அணி மாறுவதால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படாது.

ஆஸ்கரையே ஓ.பன்னீர்செல்வத்தின் நடிப்பு மிஞ்சிவிடும். அரசியலை விட்டு நடிப்புக்கு வந்திருந்தால் ரஜினி, சிவாஜியையே ஓ.பன்னீர்செல்வம் தோற்கடித்திருப்பார் என விமர்சித்தார்.

மேலும், கறந்த பால் மடி புகாது, கருவாடு மீனாகாது என்ற பழமொழியை சுட்டிக்காட்டி, அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோருக்கு அதிமுகவில் இடம் இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.