
கோப்புப்டம்
மழை காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாத சிங்கப்பூர் விமானம் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காற்றுடன் மழை பெய்தது.
இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து 178 பயணிகளுடன் சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாத சூழல் நிலவியதை அடுத்து விமானம் பெங்களூருவுக்குத் திருப்பிவிடப்பட்டது.
இதையும் படிக்க | தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
இதுபோன்று கொச்சி, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம் நகரங்களில் இருந்து வந்த விமானங்களும் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானிலே வட்டமடித்த நிலையில் தாமதமாகத் தரையிறங்கியது. மேலும், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதனால் சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டது.