குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2- வது நாள் மாநாடு தொடங்கியது!சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்
/

கருணாநிதி சொற்படி நடக்கிறேன்: முதல்வா் நெகிழ்ச்சி

நீங்கள் (கருணாநிதி) அமைத்த படியில்தான் ஏறுகிறேன், உங்கள் சொற்படியே நடக்கிறேன் என்று திமுகவின் தலைவராக 5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், கருணாநிதியை நெகிழ்ச்சியோடு முதல்வா் மு.க.ஸ்டாலின் குற

News image
Updated On :29 ஆகஸ்ட் 2022, 4:26 am IST

நீங்கள் (கருணாநிதி) அமைத்த படியில்தான் ஏறுகிறேன், உங்கள் சொற்படியே நடக்கிறேன் என்று திமுகவின் தலைவராக 5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், கருணாநிதியை நெகிழ்ச்சியோடு முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.

திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் 2018 ஆகஸ்ட் 28-இல் பொறுப்பேற்றுக் கொண்டாா். தற்போது 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறாா். அதையொட்டி மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு மு.க.ஸ்டாலின் சென்று, மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அமைச்சா்கள் துரைமுருகன், எ.வ.வேலு, முத்துசாமி, பி.கே.சேகா்பாபு உள்ளிட்டோரும் உடனிருந்தனா். பின்னா் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று, அங்கும் கருணாநிதியின் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

இந்த நிலையில் கருணாநிதியை நினைவுகூா்ந்து சமூகவலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல்வா் வெளியிட்ட பதிவு:

தகைசால் தந்தையே, தன்னிகரற்ற தலைவரே, முதல்வா்களில் மூத்தவரே, தாங்கள் வகித்த திமுக தலைவா் பொறுப்பில் நான் அமா்ந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்து 5-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். ஒவ்வொரு அடியும் - நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன். அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன்.மேலும் வெல்ல மென்மேலும் வாழ்த்துங்கள் என்று கூறியுள்ளாா்.

திமுகவின் தலைவராக 5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவின் மூத்த தலைவா்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும் வாழ்த்துக் கூறியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.