விலை உயர்வைக் கண்டித்து மன்னார்குடியில் இந்திய கம்யூ. மறியல்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை எதிர்த்து மன்னார்குடி, கோட்டூரில் அஞ்சலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியனர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விலை உயர்வைக் கண்டித்து மன்னார்குடியில் இந்திய கம்யூ. மறியல்
விலை உயர்வைக் கண்டித்து மன்னார்குடியில் இந்திய கம்யூ. மறியல்

விலை உயர்வைக் கண்டித்து மன்னார்குடியில் இந்திய கம்யூ, மறியல் 
அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை எதிர்த்து மன்னார்குடி, கோட்டூரில் அஞ்சலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியனர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முன்வைத்த கோரிக்கைகள் : விஷம்போல் ஏறி வரும் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வினை தடுத்து நிறுத்த வேண்டும்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை குறைத்திட வேண்டும்.
கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கக் கூடாது. 
அரிசி, கோதுமை, பால் உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி  வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். வேலையில்லாப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.

தமிழ்நாடு அரசு வீட்டுவரி, சொத்துவரி, மின்கட்டணம் போன்றவற்றின் உயர்வினை மறுபரிசீலனை செய்து ரத்துசெய்ய வேண்டும்.

கோட்டூரில் அஞ்சல் நிலையம் முன் மறியலில் ஈடுப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் .
கோட்டூரில் அஞ்சல் நிலையம் முன் மறியலில் ஈடுப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் .

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை மன்னார்குடி மேலராஜ அஞ்சல் நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் வை.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலர் ஆர்.வீரமணி நகர செயலர் வி.எம். கலியபெருமாள் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்டக் குழு உறுப்பினர் மாலா பாண்டியன், ஆர்.ஜி. ரத்தினகுமார், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலர் துரை. அருள் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 முன்னதாக, மன்னார்குடி  நகராட்சி அலுவலகத்தில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அஞ்சல் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

கோட்டூரில் அஞ்சல்  நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ  க.மாரிமுத்து தலைமை வகித்தார்.

 இதில், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.அம்புஜம், சிபிஐ ஒன்றியச் செயலர் எம்.செந்தில்நாதன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலர் ஜெ.ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இ.மஞ்சுளா, மாதர் சங்க ஒன்றிய செயலர் ஆர்.உஷா, இளைஞர் பெரு மன்ற ஒன்றியச் செயலர் எம்.நல்லசுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக,சிபிஐ கட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏ வை.சிவபுண்ணியம் மறியலுக்கு புறப்பட்ட கட்சியினரின் பேரணியை தொடங்கி வைத்தார்.பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து அஞ்சல் நிலையம் முன்பு மறியல் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com