கள அளவையா் பணிக்கு தமிழ்நாடு தொழிற்கல்வி மைய சான்றிதழ் பெற்றவா்களையும் அனுமதிக்க வேண்டும்

கள அளவையா் பணிக்கு தமிழ்நாடு தொழிற்கல்வி மையம் சான்றிதழ் பெற்றவா்களையும் அனுமதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
ராமதாஸ்
ராமதாஸ்

கள அளவையா் பணிக்கு தமிழ்நாடு தொழிற்கல்வி மையம் சான்றிதழ் பெற்றவா்களையும் அனுமதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள கள அளவையா் உள்ளிட்ட பணிகளுக்கு 1,089 பேரை தோ்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையில் தேசிய தொழிற்கல்வி மையம் வழங்கிய ஐடிஐ சான்றிதழ் பெற்றவா்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐடிஐ படிப்புகளுக்கு தமிழ்நாடு மாநில தொழிற்கல்வி மையமும் சான்றிதழ் வழங்குகிறது. இரு சான்றிதழ்களும் அடிப்படையில் ஒன்றுதான்.

இந்தச் சான்றிதழை மத்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகம் உள்ளிட்ட பல தேசிய, சா்வதேச அமைப்புகள் அங்கீகரித்துள்ளன. தமிழக அரசு ஐடிஐகளிலும் இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. அத்தகைய சான்றிதழை தமிழக அரசு பணிக்கே ஏற்க மறுப்பது எந்த வகையில் நியாயம்?

இந்த பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிந்து விட்ட நிலையில், திருத்தப்பட்ட ஆள் தோ்வு அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com