
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் பவுனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.40,080 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக கிராமுக்கு ரூ.55-ம், பவுனுக்கு ரூ.440 அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.752 அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பவுனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.40,080 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ரூ.5,010-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: விண்ணப்பிக்கலாம் வாங்க... ரூ.19.50 லட்சம் ஆண்டு சம்பளத்தில் எஸ்பிஐ வங்கியில் வேலை!
அதேசமயம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.70 காசு அதிகரித்து ரூ.70.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ கிலோவுக்கு ரூ.700 அதிகரித்து ரூ.70,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்து வருவதால், வட்டிவீதம் உயர்த்தப்பட வாய்ப்பில்லை என்ற நிலையில், முதலீட்டாளர்கள் பங்குப்பதிரங்கள் மீதான முதலீட்டை தங்கத்தின் மீது திருப்பியுள்ளனர். இதனால் தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தங்கத்தின் விலை அதிகரிப்பால் தங்கம் வாங்க நினைக்கும் நடுத்தரக் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரம்:
1 கிராம் தங்கம்...............................ரூ.5,010
1 சவரன் தங்கம்............................. ரூ.40,080
1 கிராம் வெள்ளி............................ ரூ.70.50
1 கிலோ வெள்ளி............................ ரூ.70,500
வியாழக்கிழமை விலை நிலவரம்:
1 கிராம் தங்கம்...............................ரூ.4,955
1 சவரன் தங்கம்............................. ரூ.39,640
1 கிராம் வெள்ளி............................ ரூ.69.80
1 கிலோ வெள்ளி............................ ரூ.69,800