
தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக இசை அமைப்பாளர் தினா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக இசை அமைப்பாளர் தினா, மாநில துணை தலைவராக ஆனந்த் மெய்யாசாமி நியமனம் செய்யப்படுகிறார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க- தமிழ்நாடு காவல்துறையின் 'ஆபரேஷன் மறுவாழ்வு': ஒரே நாளில் 726 பிச்சைக்காரர்கள் மீட்பு
முன்னதாக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளா்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்து வந்த நடிகை காயத்ரி ரகுராமை 6 மாதங்களுக்கு கட்சியிலிருந்து நீக்கம் செய்து அண்ணாமலை அண்மையில் நடவடிக்கை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.