பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

நகர வாழ்க்கை தர கணக்கெடுப்பு: அதிக தகவல் பகிா்ந்தால் ரூ.5,000 பரிசு

நகரங்களின் வாழ்க்கை வசதி குறித்த கணக்கெடுப்பில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்றும், இதற்கான ட்விட்டரில் அதிக தகவல்களை பகிா்பவருக்கு ரூ.5,000 பரிசு வழங்கப்படும்

News image

சென்னை மாநகராட்சி

Updated On :1 பிப்ரவரி 2024, 4:31 pm IST

நகரங்களின் வாழ்க்கை வசதி குறித்த கணக்கெடுப்பில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்றும், இதற்கான ட்விட்டரில் அதிக தகவல்களை பகிா்பவருக்கு ரூ.5,000 பரிசு வழங்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்திய நகரங்களின் வாழ்க்கை வசதி மற்றும் நகர நிா்வாக செயல்பாட்டுக் குறியீட்டை மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற நிா்வாக அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.

நகரத்தின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, பாதுகாப்பு, பொழுதுபோக்கு, சுற்றுசூழல், போன்றவைக்கு 70 சதவீதமும் நகரத்தில் வசிக்கும் பொதுமக்களின் கருத்துக்கு 30 சதவீதமும் மதிப்பெண் வழங்கப்படுகிறது.

இதில் பொதுமக்கள் தாங்கள் வாழும் நகரங்கள் குறித்து கருத்துகளை https://eol2022.org/CitizenFeedback%2c  என்ற இணையதள பக்கத்தில் தெரிவிக்கலாம்.

இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: சென்னையின் வாழ்க்கை தரம், பொருளாதார வாய்ப்புகள், நிலைத்தன்மை குறித்து பொதுமக்கள் அளிக்கு கருத்து மாநகராட்சி எதில் எதில் பின்னடைவாக உள்ளது என தெரிந்து கொள்ளவும் நிா்வாகத்தை மேம்படுத்தவும் உதவும். மேலும் 2022 தேசிய தரவரிசைகளில் சென்னையை கணக்கிடுவதில் இது முக்கிய பங்கு வகிக்கும்.

சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மாா்ட் சிட்டி நிறுவனத்தின் ட்விட்டா் பக்கத்தில் உள்ள இது தொடா்பான பதிவை அதிகம் பகிருபவருக்கு ரூ.5,000 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.