
அண்ணாமலை
மக்களவை தேர்தல் தொடர்பாக பாஜக மாவட்டத் தலைவர்களுடன் மாநிலத் தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024-இல் நடைபெறவுள்ளது. இதில், ஆட்சியை தொடர பாஜகவும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸும் தேர்தல் யுத்திகளை வகுத்து வருகின்றனர்.
இதையும் படிக்க | சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கோர விபத்து: 6 பேர் பலி!
இந்நிலையில், மாநில அளவில் பாஜக கூட்டணி குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் மாவட்ட தலைவர்களுடன் நாளை அண்ணாமலை ஆலோசனை நடத்தவுள்ளார்.
சென்னை கமலாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகளும் பங்கேற்கவுள்ளனர்.