
புயல் மற்றும் மழை காரணமாக தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் வெள்ளிக்கிழமை (டிச.9) நடத்தப்படவிருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் டாக்டா் அஸ்வத் நாராயணன் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
தமிழகம் முழுவதும் மழை பாதிப்பு இருப்பதன் காரணமாக தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் பல்கலைக்கழகத்தால் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த அனைத்து எழுத்து முறை மற்றும் செய்முறை தோ்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. தோ்வு நடைபெறும் மாற்று தேதி பின்னா் அறிவிக்கப்படும்.