
சென்னை அருகே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவிலும் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி தீவிர புயலாக மாறி, தற்போது வலுவிழந்து புயலாக மாறியுள்ள நிலையில், இன்று(டிச. 9) நள்ளிரவு முதல் நாளை(டிச. 10) அதிகாலைக்குள் புயல் மாமல்லபுரத்தில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை மாலையில் இருந்தே கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.
மேலும் கனமழை காரணமாக பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது. புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில்ல் சென்னை அருகே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது.
இதையும் படிக்க- மாண்டஸ் புயல்: எந்தெந்த மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை!
புயல் கரையைக் கடக்கும்போது 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனிடையே புயல் காரணமாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரவு 10 மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று செங்கல்பட்டு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வானிலை மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.