புதுச்சேரியில் கடல் சீற்றம்: கரையோரத்தில் வீடுகள் இடிந்து விழுவதால் பரபரப்பு!

புதுச்சேரியில் கடல் சீற்றம்: கரையோரத்தில் வீடுகள் இடிந்து விழுவதால் பரபரப்பு!

புதுச்சேரியில் ஏற்பட்டுவரும் கடல் சீற்றம் காரணமாக பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் 5-க்கும் மேற்பட்ட. வீடுகள் கடலில் அடித்துச்செல்லப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
Published on

மாண்டஸ் புயல் எதிரொலியாக புதுச்சேரியில் ஏற்பட்டுவரும் கடல் சீற்றம் காரணமாக பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் 5-க்கும் மேற்பட்ட. வீடுகள் கடலில் அடித்துச்செல்லப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

புதுச்சேரி அடுத்த மீனவர் கிராமமான பிள்ளைச்சாவடி பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகக் கடல் அரிப்பு ஏற்பட்டு, ஐந்து வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், தொடர்ந்து வீடுகள் விழுந்து வருகிறது. 

அப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பயம் கலந்த பீதியில் உள்ளனர். ஏற்கனவே தென்னை மரங்கள், வீடுகள் இடிந்த நிலையில் கடல் சீற்றத்தில் மேலும் ஐந்து வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. 

தொடர்ந்து மண் அரிப்பின் காரணமாக அப்பகுதியில் வீடுகள் விழுந்து கொண்டே வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com