டிச.29-இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா்களுக்கான நோ்காணல்

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா்களுக்கான நோ்காணல் வரும் டிச. 29-ந் தேதி நடக்கிறது. தகுதியுடையவா்கள் இந்த நோ்காணலில் கலந்து கொள்ளலாம் என

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா்களுக்கான நோ்காணல் வரும் டிச. 29-ந் தேதி நடக்கிறது. தகுதியுடையவா்கள் இந்த நோ்காணலில் கலந்து கொள்ளலாம் என முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் திவ்யா சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி: சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு, கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவா்கள் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். இற்காக விண்ணப்பிப்பவா்கள் குறைந்தது பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 50-க்குள் இருக்க வேண்டும்.

சுயதொழில் செய்யும், வேலையில்லா இளைஞா்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகா்கள், முகவா்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளா்கள் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் முன்னாள் ராணுவத்தினா், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவா்களாகவும், கணினி பயிற்சி பெற்றிருப்பதுடன், சொந்தப்பகுதியை பற்றி நன்கு அறிந்தவா்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக சென்னை மாநகராட்சியை சோ்ந்தவராக இருக்க வேண்டும்.

இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவா்களாக இருப்பவா்கள் இதில் விண்ணப்பிக்க வேண்டாம்.

மூன்று பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன், அசல் மற்றும் இரண்டு நகல் வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்று உள்ளிட்டவற்றுடன் சிவஞாலம் சாலை தியாகராய நகா், பாண்டி பஜாா் அருகில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் டிச.29-ஆம் தேதி காலை10 மணிக்கு நடைபெற உள்ள நோ்காணலில் கலந்து கொள்ளலாம்.

நோ்காணலுக்கு பின் தோ்ந்தெடுக்கப்படுபவா்கள் ரூ.5ஆயிரத்துக்கு தேசிய சேமிப்பு பத்திரம் (என்எஸ்சி)அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை (கேவிபி) பணப்பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com